பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

உவமைக்கவிஞர் சுரதா


ஆகாய வாக்கு - வான்மொழி
நூல் : திருப்புனவாயிற் புராணம் (1928)
நூலாசிரியர் : திருவாரூர் தியாகராஜ கவிராஜ தேசிகர்
அரும்பதவுரையாசிரியர் தூத்துக்குடி பொ. முத்தைய பிள்ளை
பாத கமலம் - திருவடித் தாமரை
தர்மசாத்திரம் - பட்டாங்கு
விருதா - வீண்
பூததூளி - அடிப்பொடி
பால குச அம்பிகை - இளமுளையம்மை
பர்வத புத்திரி - மலைமகள்
பூரணி - நிறைந்தவள்
சுகக்கடல் - இன்பவாரி
கோமளம் - பேரழகு
பஞ்சாக்கரம் - எழுத்தஞ்சு (அஞ்செழுத்து)
வேதபுரி - மறையூர்
தீபம் - விளக்கம்
சந்திர மௌலீசுரர் - மதி முடியார்
பிரவாகம் - பெருக்கு
விற்பனம் - அறிவுடையை
நவம் - புதுமை
நூல் : திருவோத்தூர் ஸ்ரீ இளமுலை அம்பிகை அந்தாதி (1928)
நூலாசிரியர் : கருந்திட்டைக்குடி வி. சாமிநாத பிள்ளை
கோஷித்தல் - ஆரவாரித்தல்
சிவலிங்கம் - அருட்குறி
விருத்தபுரி - பழம்பதி
விமோசனம் - நீங்குதல்