பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44 ❖

திரும்பி வந்த மான் குட்டி



வெகு நேரம் விழிச்சிருந்தோம். அப்புறம் அப்படியே ஹாலிலே தூங்கிட்டோம்.

அதிகாலையிலே முழிச்சுப் பார்த்தோம். சத்தத் தைக் கானோம். குருவிக் குஞ்சுகள் கத்திக் கத்தி ஓய்ந்து போச்சோன்னு நினைச்சோம்.

அப்போ, ஒரு பெரிய பறவை படத்துக்குப்பின்னா லேயிருந்து பறந்து வந்ததைப் பார்த்தோம். குஞ்சுகள் கத்துறதைக் கேட்டு, வேறே ஒரு தாய்ப் பறவை இரை கொண்டு வந்து கொடுத்திருக்கணும்னு நினைச்சோம். இரையைத்தான் அது கொடுத்திச்சு: செத்துப் போன அம்மாவைக் கொடுக்க முடியுமா?

தினமும் அந்தப் பெரிய பறவை வந்து குஞ்சுகளுக்கு இரை கொடுத்திச்சு. கொஞ்ச நாளிலே குஞ்சுகளுக்கு இறக்கை முளைச்சுப் பறந்து போயிடுச்சு,

அம்மாக் குருவி செத்ததிலேயிருந்து நாங்க ஃபேனைப் போடாமலே இருந்தோம். அந்தக் குஞ்சுகள் பறந்து போனதுக்கப்புறம், வேறொரு குருவி அடிக்கடி வந்து அதே படத்துக்குப் பின்னாலே உட்காருது. அதுவும் அங்கே முட்டை யிட்டுக் குஞ்சு பொரிக்கப் போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டோம்.