பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 69



மாதிரி தடியை ஊன்றித் தள்ளாடித் தள்ளாடி நடக்கும். பெரியவர்கள் சின்னவர்கள் எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.

வித்தை முடியப் போகிற சமயம், “ரங்கா, சுத்தி நிற்கிற புண்ணியவான்களெல்லாம் உன் வித்தையைப் பார்த்துட்டுச் சும்மா போக மாட்டாங்க. தாராளமாகக் காசு கொடுப்பாங்க, அவங்க தரதைச் சலாம் போட்டு வாங்குடா ரங்கா” என்பார் கோவிந்த சாமி.

உடனே ரங்கன் தகரக் குவளையை எடுத்துக் கொண்டு சலாம் போட்டபடி சுற்றிச் சுற்றி வரும். ‘ஆஹா! ஒஹோ’ என்று வேடிக்கை பார்த்தவர்களில் பலர், மெல்ல நழுவி விடுவார்கள்; சில பேர் தான் காசு போடுவார்கள். அதுவும் பெரும்பாலும் ஐந்து பைசாவாகத்தான் இருக்கும்.

ஒரு நாளைக்கு குவளையிலே விழுகிற சில்லறைகளையெல்லாம் சேர்த்து எண்ணிப் பார்த்தால், இரண்டு ரூபாய், மூன்று ரூபாய்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும்