பக்கம்:சொன்னார்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தில், அன்று காற்றோடு கூட பெய்த பனியினால் பட்ட பாட்டை சொல்லி முடியாது. என்னிடமிருந்த உயர்ந்த விலையுள்ள கம்பளிகள் அனைத்தையும் போட்டு மூடியும்; நெருப்பைக் கனப்பாக்கி அருகில் வைத்தும் குளிர் தீரவில்லை. இந்த குளிரினால் பல் வலியும், தலைவலியும் கண்டு தூக்கமும் வரவில்லை. ஆகவே இரவெல்லாம் அவஸ்தைப் பட்டோம்.

—பகடாலு நரசிம்மலு நாயுடு (20-1-1887)

தற்போது அநேகம் புத்தகங்கள் பிரசுரமாகின்றன. இவற்றால் வாசகர்களைக் காட்டிலும் ஆசிரியர்களுக்கே அதிக லாபம். இது தவிர, ஒரு புத்தகம் மறைந்தவுடன் மற்றொரு புத்தகம் வெளிவருகிறது. இவ்விதம் வெளியீட்டிற்குக் குறைவே இல்லே. ஒருவருடைய அபிப்பிராயம் புத்தக ரூபத்தில் வந்துவிட்டது என்ற காரணத்தைக் கொண்டு, அவரை விட அதிக மதிப்பை அதற்குக் கொடுக்கக் கூடாது. கண் கவரும் "விதத்தில் பிரசுரிக்கப்பட்டு, கண்ட பத்திரிகைகளில் எல்லாம் பெரும்பாலும் அவற்றின் ஆசிரியராலேயே எழுதப்பட்ட மிகவும் திருப்திகரமான விமரிசனத்தைக் கொண்ட புத்தகங்களைப் படிக்க நீங்கள் ஆவல் கொள்ளக் கூடாது. படிக்கும் வழக்கம் பாராட்டத் தக்கது; ஆனால் அது புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். நோக்கமற்ற படிப்பு தகாது. சுயமாகச் சிந்திக்கவும் உங்களுக்கு ஆசை இருக்கவேண்டும்.

—சர். வி. பாஷ்யம்ஐயங்கார் (28-3-1893)
(பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில்)

இந்த நெல்லிக்கனியில் பாதியைத் தவிர நான் என்னுடையதென்று சொல்லத்தக்க வேறு பொருளே இல்லை. நான் சார்வ பெளமனாக இருந்தும், மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. இந்த இம்மைச் சாம்ராஜ்யத்தையும், நீர்க்குமிழி போன்ற நிலையில்லாப் பிரபுத்துவத்தையும் வெறுத்துத் தள்ளினேன். நான் மக்களை ஆள்கின்றேன். ஆயினும், என்னைத் துக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/12&oldid=1013127" இலிருந்து மீள்விக்கப்பட்டது