பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. போரில் ஊக்கம்

தலையாலங்கானத்தில் வெற்றி மகளைக் கைப்பிடித்தபின் பாண்டியன் நெடுஞ்செழியனுக்குத் தோள்திவுை மிகுதியாகிவிட்டது. அது மிகப் பெரிய போராக இருந்ததனால் போர்த் தொழிலின் துறைகளையெல்லாம் நன்கு உணரும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. முடியுடை மன்னர்கள் முறிந்தோட வீர விளையாட்டு நிகழ்த்திய அவன் புகழ் தமிழக முழுவதுமே பரவியது. ‘இளைஞன் இவன்; எப்படி நாட்டை ஆளப் போகிருனோ!’ என்று ஐயுற்றவர்கள் இப்போது அவனது இளமையை எண்ணியே பெருமிதம் அடைந்தார்கள். நெடுங்காலம் அவன் ஆட்சி செய்வான் அல்லவா? இனியும் எங்கேனும் பகைவர் இருந்தால் அவர்களை அடியோடு தொலைப்பேன் என்று வீர முழக்கம் செய்தான் வழுதி.

அக் காலத்தில் பாண்டி நாட்டின் வட கிழக்கே சோழ நாட்டின் எல்லையில் கடற்கரையை அடுத்த பகுதி ஒன்றை எவ்வி என்பவன் ஆண்டு வந்தான். நீழல் என்னும் ஊரில் அவன் வாழ்ந்தான். பெரும் போர் நடந்து முடிந்த இந்தச் சமயத்தில் பாண்டிப் படை இளைப்பாறும் என்று அவன் எண்ணிக் கொண்டான். தன் நிலப் பகுதியை அடுத்துள்ள பாண்டி நாட்டுப் பகுதி ஒன்றின்மேல் படை, யெடுத்துச் சென்று அதைத் தனதாக்கிக்கொண்டு கொடி நாட்டினான்; இந்தச் செய்தி பாண்டியனை எட்டியவுடன் அவன் கொதித்தெழுந்தான். யானைகளைப்