பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதனார் படைத்த பாட்டு

67

வாழ்க்கையில் உலகியற் செயல்களே நிலையான பயன் அளிப்பன என்ற எண்ணம் நீங்கும். பலருக்கு நலம் செய்து தன்னலத்தை மாற்றுவதற்கும் அந்த உணர்வு துணை செய்யும். அதனால் புலவர்கள், செல்வம் நிலையாது என்பதையும், வாழ்க்கை நிலையாது என்பதையும், உலகத்துப் பொருள்கள் நிலையா என்பதையும் செல்வர்களுக்கு எடுத்துக் காட்டுவார்கள். அவ்வாறு கூறிய அறிவுரைப் பாடல்கள் காஞ்சி என்னும் புறத்திணையில் அடங்கும்.

மாங்குடி மருதனாருக்கு இப்போது அந்தத் திணை நினைவுக்கு வந்தது. பாண்டியன் நெடுஞ்செழியன் இப்போது பெற்ற வெற்றிகள் போதுமானவை. அவன் பெற்றிருக்கும் நாட்டின் விரிவும் இனி நாடாசை கொள்ளாத வகையில் அமைந்திருக்கிறது. மேலும் மேலும் போரில் தாவும் அவனது மனத்தைத் தடுத்து நிறுத்த உலகியற் பொருளின் நிலையாமையை எடுத்து உணர்த்தலாம்.

யாருக்கு எதைச் சொல்ல வேண்டும் என்று ஆராய்ந்து சொல்பவர்களே அறிவுடையவர்கள். இங்கே, வீரமே பெரிதென்று கருதி வாழும் அரசனுக்குச் செல்வ நிலையாமை முதலியவற்றை எடுத்துரைக்க வேண்டும். அதை அப்படியே, “எல்லாரும் செத்துப் போவார்கள்; எல்லாம் அழிந்து போய்விடும்” என்று சொல்வது முறையன்று. அரசனிடம் இப்போதுள்ள இயல்புகளைப் புகழ வேண்டும். முன்னோர்களைப் புகழ வேண்டும். அவன் நாட்டையும் நகரத்தையும் புகழ வேண்டும். அவற்றுக்கு நடுவிலே நிலையாமை குறிப்பாகப் புலப்படும்படி செய்ய வேண்டும். இவ்வாறு சிந்தித்து முடிவு கட்டினார் புலவர். நீண்ட பாட்