பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிளி பறந்தது

3

இயற்கையாகவே சில பண்புகள் இருக்கும். நுட்பமான அறிவும் வீரமும் தமிழ்க் காதலும் அவர்கள் குருதியிலே ஊறியவை. இந்த இளைய அரசனிடமும் அவை இருப்பதாகவே புலப்பட்டன. எப்படியும் சில ஆண்டுகள் அரசாட்சி செய்து அநுபவம் பெற்றுவிட்டால் பிறகு யாதோர் இடயூறுமின்றி அரசியற் கடமைகளைச் செவ்வனே ஆற்றும் திறமை பெற்று விடுவான். இந்த நம்பிக்கை அமைச்சர்களுக்கு இருந்தது.

அரசுக்குக் கேடு வரவேண்டுமென்றால் இரண்டு வகையாக வரும். ஒன்று அகப்பகையால் வரும். மற்றொன்று புறப்பகையால் வரும். அரசன் திறமையற்றவனாக, குடிமக்களுடைய நலம் கருதாதவனாக, தன்னுடைய இன்பம் ஒன்றனையே எண்ணுபவனாக இருந்தால் அகப்பகை தோன்றும்; நாட்டிற்குள் பல கட்சிகள் உண்டாகும்; அமைச்சரும் பிறரும் மனம் வேறுபட்டுச் சூழ்ச்சி செய்வார்கள். இதுவே அகப்பகையின் வளர்ச்சி.

பிற நாட்டவர்கள் அரசனிடம் பொருமை கொண்டாலும், அவனுடைய நாட்டிலுள்ள வளத்துக்கு ஆசைப்பட்டாலும், பழம் பகை இருந்தாலும், படைவன்மை இல்லாதவன் என்று உணர்ந்தாலும் போர் செய்து நாட்டைக் கைப்பற்ற எண்ணுவார்கள். புறப்பகை மூளும்.

இந்த இரு வகையிலும், அகப்பகை உண்டாக இப்போதைக்கு வழி இல்லை. அமைச்சரும் படைத்தலைவரும் சான்றோரும் பாண்டிய மரபினைப் பாராட்டிப் பெருமதிப்பு வைத்துப் போற்றுகிறவர்கள்; ஒரு பாவையைச் சிங்காதனத்தில் வைத்தாலும் அரசனென