பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

பாண்டியன் நெடுஞ்செழியன்

நமக்கு அளிக்காமல், ‘திருட்டுத்தனமாக ஓடிவிட்டான்’ என்ற சிறுமையைத் தான் பெற்றுக்கொண்டு போய் விட்டான். அவன் செய்த பேதைமைச் செயலுக்கு இதுகாறும் உரிமையை இழந்து பிணிப்புற்றிருந்ததே போதும். பாவம்! இனியாவது தன் வலிமை அறிந்து தன் நாட்டில் செய்யவேண்டியதைச் செய்யட்டும்.”

‘அரசனா பேசுகிறான்? இளமைப் பிராயத்தில் இத்தனை அறிவும் சால்பும் எப்படி வந்தன இவனுக்கு?’ என்று, கேட்ட சான்றோர்கள் வியந்தார்கள். அரசவைப் புலவர் மாங்குடி மருதனார் உள்ளம் பூரித்தார். பாண்டி நாடு நல்ல பண்புடைய மன்னனைப் பெற்றிருக்கிறதென்று உணர்ந்துகொண்டதனால் வந்த மகிழ்ச்சி அது.