பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலேயாலங்கானத்துப் பெரும் போர்

31

பிலும் வியப்பு! இது முன்பு கண்டறியாத போர்” என்று தம் வியப்புக்குரிய காரணத்தை வெளியிட்டார் இடைக்குன்றூர் கிழார்.

“அந்த ஏழு பேரையும் தேடி இவனா போனான்? மண்ணாசை இவனுக்கு இல்லை. பாண்டி நாட்டைத் தக்கபடி ஆண்டுவந்தால் போதுமே. அவர்களுக்குத்தான் மண்ணாசை; பாண்டி நாட்டைப் பங்கிட்டுக் கொள்ளலாம் என்று ஆசை. தலை வாசலில் வந்து படையுடன் நிற்கும்பொழுது அரண்மனையில் தூங்கிக் கொண்டிருக்க முடியுமா?”

“அவர்கள் நாட்டின் எல்லையில் வந்து அக்கிரமமாகப் புகுந்தது உண்மைதான். அவர்களுக்கு இவனுடைய பெருமை தெரியவில்லை; இவனுடைய தலைமையும் தெரியவில்லை. ஆசை ஒன்றே உந்த அறிவு மங்க வந்துவிட்டார்கள். அப்படி வந்தவர்கள் எளியராகத் தோற்றவில்லை. முன்பே பல போரில் ஈடுபட்டுக் கழல் கட்டிக்கொண்டவர்கள். அவர்களை நான் ஒருவனே சென்று அடுகிறேன் என்று புறப்பட்டானே, நம் அரசன்; அது எவ்வளவு ஆச்சரியமான செயல்!”

“உண்மைதான். இவனும் அவர்களைப் போல வேறு யாரையேனும் துணைவர்களாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. தன் பலத்தில் இவன் அத்துணை நம்பிக்கை வைத்திருக்கிறான்.”

“அது மாத்திரம் அன்று. முன்பு சேரன் எதிர்த்தபோது படைத் தலைவர்களை விட்டு அடக்கினது போலச் செய்திருக்கலாம். அப்படியும் செய்ய