பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெடுநல் வாடை

55

வரையப்பெற்ற சித்திரத்தைப் போலத் தோன்றுகிறாள் பாண்டிமாதேவி.

அழகிய மகளிர் அவள் காலை வருடிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலுக்குச் செம்பஞ்சுக் குழம்பிட்டு அலங்காரம் செய்வது வழக்கம். இப்போது ஓர் அலங்காரமும் இல்லை.

அருகில் கூந்தலில் நரை விரவிய முதிய செவிலிமார்கள் அவளுக்குப் பொழுது போவதற்காகப் பலவிதமான கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நடுநடுவே, “உன் நாயகர் இதோ விரைவில் வந்து விடுவார்” என்று ஆறுதல் சொல்லுகிறார்கள். அதைக் கேட்டும் அவளுக்கு மன அமைதி உண்டாகவில்லை. இன்னும் கலங்கியபடியே இருக்கிறாள்.

கட்டிலில், கால்களை நட்டு மெழுகுச் சீலையில் சித்திரம் எழுதின மேற்கட்டியை மேலே கட்டியிருக்கிறார்கள். அதில் இராசிகளை எழுதியிருக்கிறார்கள். சந்திரனும் உரோகிணியும் சேர்ந்திருக்கும் ஓவியமும் இருக்கிறது. அதைப் பார்த்து மாதேவி, ‘நாம் நம் காதலருடன் இவ்வாறு பிரிவின்றி ஒன்றுபட்டு இருக்கவில்லையே!’ என்ற நினைப்பினால் வருந்தித் தன் கண்ணில் அரும்பிய நீரைக் கைவிரலால் வழித்துத் தெறிக்கிறாள்.

இவ்வாறு பிரிவுத் துன்பம் தாங்காமல் தனிமையிலே வருந்திக் கிடக்கிறாள் பாண்டியன் மனைவி.

அவள் இவ்வாறு இருக்கப் பாண்டியன் எப்படி இருக்கிறான்?

இது பாண்டியன் பாசறை. அங்கங்கே கூடாரத்தில் படை வீரர்கள் தங்கியிருக்கிறார்கள். போர்க்