பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேச்சைக் கேட்டுக் கேட்டு மக்கள்
உணர்ச்சி பெற்றனர்;
பெரிய பெரிய உண்மை யெல்லாம்
எளிதில் அறிந்தனர்.

இமயம் தொட்டுக் குமரி மட்டும்
நேரு சென்றனர்;
ஏழை எளிய மக்க ளுடனே
உறவு கொண்டனர்;
அமைதி யாக காந்தி வழியில்
புரட்சி செய்தனர்;
அடிமை வாழ்வை அகற்று தற்கே
வழியும் தேடினர்.

கூடப் படித்த மாண வர்முன்
பேசப் பயந்தவர்,
கொட்டும் மழைபோல் லட்சம் மக்கள்
முன்னே பேசினர்.
நாடு போற்றும் தலைவ ரென்ற
பெயர் எடுத்தனர்!
நாக்கு வன்மை உடையார் என்ற
புகழும் பெற்றனர்!

43