பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

குமரியின் மூக்குத்தி

அரசன் மூக்குத்தியை வருவித்தான். கருணாகரன் அதைப் பார்த்தான். யாராக இருந்தாலும் அதைக் கண்டால் சொக்கிப் போவார்கள். வைர லட்சணம் நன்றாகத் தெரிந்த தொண்டைமான் அதையே பார்த்துக்கொண்டிருந்தான். சோழ மன்னனுடைய அரண்மனையைச் சுடும் கவலைத் தீயை எழுப்பிய பொறியை அவன் தன் கண்ணே இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான்.

"என்ன ஐயா. அப்படிப் பார்க்கிறீர்? உம்முடைய பார்வையே சொல்கிறது. இது போல உம்முடைய வாழ்விலே ஒன்றை நீர் கண்டதில்லை யென்று" என்று சொல்லி அனந்தபதுமன் கைத்தான்.

உண்மையில் அந்தப் பேச்சைக் கேட்ட பிறகுதான் தொண்டைமான் தன் இயல்பான நிலைக்கு வ்ந்தான். ஆனாலும் அறிவாளி அல்லவா?. -

"மகாராஜா அப்படிச் சொன்னது ஓரளவு உண்மை தான். நான் இந்த மூக்குத்தியில் நவமணியில் ஒன்றாகிய வைரத்தைக் காணவில்லை. உள்ளத்தை வெதுப்பும் வைரத்தையே காணுகிறேன்' என்றான். -

"என்ன ஐயா உளறுகிறீர்?" என்று சிறிதே சினக் குறிப்போடு அரசன் கேட்டான். . . .

'மன்னர் பெருமான் சினம் கொள்ளக் கூடாது. இதைக் கண்ட மகளிர் எல்லாம் இதை நாம் அணிவதற்கு இல்லையே என்று பொருமுவார்கள்; அதைத்தான் சொல்ல வந்தேன்."

"அப்படிச் சொல்லும், அது கிடக்கட்டும். இந்தமாதிரி வைரம் உலகத்தில் எங்காவது கிடைக்குமா?” என்று கேட்டான் கலிங்கத்தரசன்.

"நான் சொல்வதைக் கேட்டு அரசர்பிரான் சினம் கொள்வதில்லை என்று உறுதி கொடுத்தால் இதைப் பற்றிச் சில செய்திகளைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இல்லையானல், உண்மையில் இதற்குச் சமான