பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுஇர வதிலே எழுப்பிடுவாள்; கன் ருய் வேலே வாங்கிடுவாள்! இப்படித் தினந்தினம் கடுஇரவில் எழுப்பிய தாலே மிகமிகவே வருங்தினள், வேலைக் காரியுமே. வாட்டங் கொண்டு கூறினளே: சோம்பல் ஒட்டிக் காலையிலே சுறுசுறுப் பினேயே தங்திடுமாம் சேவல் தன்னைக் கொன்றேன்.நான். சிறிதும் யோசனை இல்லாமல். சேவல் இருக்கையில் எஜமானி தினமும் காலையில் எழுப்பிடுவாள். சேவல் இறங்தபின் நடுஇரவே சித்திர வதைதான் செய்கின்ருள். ஐயோ! என்றன் துயரமதை யாரிடம் கூறி அழுதிடுவேன்? சேவலைக் கொன்ற பெரும்பழிதான் தீர்ந்திடும் காளும் எங்காளோ? 80