பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 ❖

திரும்பி வந்த மான் குட்டி


கும் போதுதான் தின்ன வேண்டும். கேவலமான வாழ்க்கை.”

இப்படி அம்மா மானும் குட்டி மானும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தன.

‘நானாக இருந்தால், திரும்பியே வந்திருக்க மாட்டேன். இவ்வளவு வசதிகள் இருந்தும், இந்த அம்மா ஏன் தான் திரும்பி வந்ததோ!’ என்று குட்டி மான் அடிக்கடி நினைக்கும்.

ஒருநாள் இரவு நேரம். அம்மா மானும் கூடவே இருபது, இருபத்தைந்து மான்களும் ஓரிடத்தில் படுத்திருந்தன. யாருக்கும் தெரியாமல், அந்தக் குட்டி மான் மெதுவாகப் புறப்பட்டது; புதருக்குள் புகுந்து புகுந்து காட்டின் எல்லைக்கு வந்து விட்டது.

‘விடிவதற்குள் மனிதர்கள் வசிக்கும் ஓர் ஊருக்குள் போக வேண்டும். பெரிய பங்களா ஒன்றுக்குள் புகுந்து கொள்ள வேண்டும். விடிந்ததும், அந்த வீட்டுக் குழந்தைகள் என்னைப் பார்ப்பார்கள். ஆனந்தத்தில் துள்ளிக் குதிப்பார்கள், கட்டி அணைப்பார்கள். நிறைய நிறையத் தின்னத் தருவார்கள்’ என்று நினைத்து, எந்தப் பக்கம் போகலாம் என்று பார்த்தது.

அப்போது, திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஒரு முயல் ஓடி வந்து காட்டுக்குள்