பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22 ❖

திரும்பி வந்த மான் குட்டி


இருக்கிறவங்களையெல்லாம் தண்டோராப் போட்டு வரவழைப்போம். அவர்களிலே ரொம்பக் கொழு கொழுன்னு இருக்கிற சில பேரைத் தேர்ந்தெடுப்போம். அவங்க எப்படிக் கொழு கொழுன்னு ஆனாங்க, அப்படி ஆகணும்னா என்ன என்ன செய்யனும்னு அவங்க ஒருத்தரை ஒருத்தர் கலந்து ஆலோசிச்சு முடிவு சொல்லட்டும்” என்றார்.

“அப்படியா! சரி, இதோ இன்றைக்கே தண்டோராப் போடச் சொல்கிறேன்” என்றார் முன்கோபி ராஜா.

அந்த நாட்டிலேதான் பஞ்சமாயிற்றே! தொந்தி பருத்த ஆள் எங்கே கிடைப்பார்கள்? இருந்தாலும், இந்தச் செய்தி அண்டை அயலில் உள்ள நாடுகளுக்கு எட்டவே, குறிப்பிட்ட நாளில் நன்றாகத் தொந்தி பருத்த 17 பேர் நடக்க முடியாமல் நடந்து அரண்மனைக்கு வந்தார்கள்.

“மந்திரி, சணல் கயிறு எங்கே? கொண்டு வரச் சொல்லுங்கள். இவர்களது தொந்திகளை அளந்து பார்ப்போம்” என்றார் ராஜா.

“அரசே, அதெல்லாம் வேண்டாம். இதோ இப்படிச் செய்தே தேர்ந்தெடுத்து விடலாம்” என்று சொல்லி விட்டு அந்த மண்டை பருத்த மந்திரி என்ன செய்தார் தெரியுமா?