பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 134

பாயசம் - மணமங்கலம்

காயசம் பந்தத்தைப் போக்கி யருள்குகன்

காந்த மலை மேயசெம் மற்கு மனங்கொடுத் தாள்தன்

விழைவறியாள்; தாயென உள்ளவள், வேலனைக்கூவித்

தயையிலளாய்ப் பாயசம் போக்கின் மணமங் கலம்செய்யும்

பாங்குறுமே. காய சம்பந்தத்தை - உடம்பின் தொடர்பை; பிறவியை. செம்மற்கு - தலைவனிடத்தில். மனம்

கொடுத்தளாள் - மனத்தைப் பறிகொடுத்த தலைவி. வேலன் - பூசாரி. பாய் அசம்போக்கின் மணமங்கலம் செய்யும் பாங்குறுமே - பாய்கின்ற ஆட்டைப் பலிகொடுத்தால் தலைவிக்கு மணமாகிய மங்கல காரியத்தைச் செய்யும் தன்மை உண்டாகுமோ? இவளுக்குரிய தலைவனோடு இவளை மணம் செய்து கொடுப்பதுதான் பரிகாரமேயன்றி இந்த ஆட்டைக் கொல்வதால் பயன் இல்லை என்றபடி

பாயசத்தை இல்லாமல் செய்து விட்டால் மங்கலமான மணம் செய்யும் பாங்கு வருமா என்பது தொனிப் பொருள். பாயசம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது அல்லவா? - ஆட்டும் - பாட்டும்

வீட்டுக்கு வம்மெனத் தொண்டரை

ஏற்றும் விமலன்கொங்கு நாட்டுக்குள் மோகையிற் காந்தச் சிகரியின் நாயகன் சீர் - வேட்டுக் குலவாத பாதகர் போல்தாய்

வெறியெடுத்தாள்; ஆட்டுக்கும் சங்கிவள் பாட்டுக்கும்

என்னை அமைதொடர்பே.