பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 25



அவர்கள் எழ முடியாமல் எழுந்தார்கள். நடுநடுங்கியபடி நின்றார்கள். என்ன சொல்வதென்று புரியாமல் விழி விழி என்று விழித்தார்கள்.ராஜாவின் கோபம் மேலும் அதிகமாகிவிட்டது.

“தண்ட சோற்றுத் தடியன்கள். உங்கள் தொந்திகளைக் கலக்குகிறேன் பாருங்கள்” என்று கூறிக் கொண்டே முன்கோபி ராஜா இரண்டு கைகளில் உள்ள விரல்களையும் மடக்கிக் கொண்டு, இருவரின் அருகிலே சென்றார். உடனே அவர்கள், “ஐயோ! அப்பா” என்று அலறிக் கொண்டு ஓட முடியாமல் ஓடினார்கள். அவர்களைத் தொடர்ந்து மற்ற மூவரும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடினார்கள்.

“தொலைந்தார்கள். இனியும் இவர்களை வைத்துச் சோறு போட்டால், பஞ்சம், கடும் பஞ்ச மாகிவிடும்” என்று ஆறுதல் அடைந்தார் ராஜா.

உடனே அவர் மண்டை பருத்த மந்திரியை அழைத்து வரச் சொன்னார்.

“ஓய், உமது யோசனையைக் கேட்டால் உருப்பட்டாற் போலத்தான். பஞ்சம் போக வழி கேட்டால், பஞ்சம் அதிகமாக வழி சொல்லிவிட்டீரே! அந்த ஐந்து தூங்குமூஞ்சித் தடியன்களும் சேர்ந்து அரண்மனைச் சமையல் சாமான்களையே ஏப்பம் விட்டு விட்டார்கள். அவர்களிடமிருந்து ஒரு யோச