பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48 ❖

திரும்பி வந்த மான் குட்டி



நினைப்பு. மறந்தும் அவர் பிறருக்கு உதவ மாட்டார். தம்மைப் பொறுத்தவரையில் நன்றாக உண்பார்; உடுப்பார், உறங்குவார்.

ஒருநாள் இரவு மணி ஏழு இருக்கும். அந்தத் தெருக்கோடி வீட்டிலிருந்து ஒருவர் வேகமாகக் கார்த்திகேயரின் மாளிகையை நோக்கி வந்தார். மாளிகை வாசலுக்கு வந்ததும் ஒரு நிமிஷம் நின்றார். பிறகு, தயங்கித் தயங்கி உள்ளே சென்றார். அப்போத “யாரது?” என்ற குரல் மிகவும் அதிகாரத்துடன் கேட்டது. அது வேறு யாருடையதுமல்ல; கார்த்திகேயருடையதுதான்!

“ஐயா! என் குழந்தைக்கு இரண்டு நாளாக ஜூரம். இப்போது உடம்பு அனலாய்க் கொதிக்கிறது. குழந்தை கண் திறக்கவில்லை”. வந்தவர் முழுவதையும் கூறுவதற்குள், “அதற்கென்ன? இங்கே யாசகம் கேட்க வந்து விட்டாயா? போ, போ. வேறு வேலை இல்லை” என்று எரிந்து விழுந்தார் கார்த்திகேயர்.

“யாசகம் கேட்க வரவில்லை. தயவு செய்து என் பேச்சைக் கேளுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் இருக்கிறார். அவரிடம் டெலிபோனில் தகவலைச் சொன்னால் உடனே வந்துவிடுவார். அதனால் கொஞ்சம் டெலிபோன்...”