பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தவத்திரு அடிகளார்


எதுவும் சரியாக இயங்காதுபோனால் தலையும் கெடும். ஆதலால், ஒவ்வொன்றும் முறையாக இயங்குதலே வேண்டும்.”

1241. “உயிர்ப்புள்ள விழிப்பு நிலையில் சமுதாயம் இயங்கினால் வாழ்நிலை சிறக்கும்.”

1242. “பெண், ஒரு போகப் பொருள் என்ற கருத்து உள்ளவரையில் பெண்ணடிமைத்தனம் நீங்காது.”

1243. “சுற்றுப்புறச் சூழ்நிலை காரணமாக நல்லவர்களாக இருப்பதும் இயற்கை.”

1244. “தமிழர்கள் உயர் சிந்தனையாளர்கள்; ஆனால் செயலாளர்கள் அல்லர்.”

1245. “நிறைய ஈட்டல்; குறைவாகச் செலவழித்தல்-இதுவே நல்வாழ்க்கையின் நியதி.”

1246. “செல்வம் கிடைக்கும் பொழுது நுகர்வைக் கூட்டிக் கொண்டால், வருவாய் குறையும்போது இடர்ப்பாடு தோன்றும்.”

1247. “கடமைகள், உரிமைகள், பொறுப்புணர்வுகள் ஆகியன இசைந்த ஒரு பண்பே, கூட்டுறவு என்பது.”

1248. “சிறந்த கூட்டுறவாளன் சொல்வதற்கு முன்பு கேட்பான்; வாங்குவதற்கு முன்பு கொடுப்பான்; உண்பதற்கு முன்பு உழைப்பான்.”

1249. “ஆக்கம் தேடி, முடியும் என்ற நம்பிக்கையில் “பெறமுடியாதவர்கள் இழப்பில் பெரிதும் கவலைப்படுவர்.”