பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளத்தில் முள்

81

விசுவநாதருக்கு இப்போது திகைப்பு உண்டாகி விட்டது. ஆயிர ரூபாய்! விட மனசு வரவில்லை. இதைக் கொடுத்துவிட்டு, இதே மாதிரி வேறு ஒன்று செய்து விட்டால் போகிறது.

"நவராத்திரிக்கு இன்னும் மூன்றே நாட்கள் இருக்கின்றன. அதற்குள் எப்படிச் செய்வது? ஏதோ பைத்தியக்காரத்தனமாகப் பேசி அகப்பட்டுக் கொண்டோமே!' என்று ஓர் எண்ணம் அவருக்குத் தோன்றியது. ஆயிர ரூபாய் என்ற நினைவு அவரைச் சற்றே சபலத்துக்கு உள்ளாக்கியது.

என்ன யோசிக்கிறீர்கள்?' என்று செல்வர் கேட்டார். அதற்குள் கலைஞர் ஒருவிதமாக முடிவுக்கு வந்துவிட்டார். "இந்த ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். நவராத்திரிக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. நவராத்திரியன்று காலையில் பணத்துடன் ஆளை அனுப்புங்கள். விக்கிரகத்தைக் கொடுத்தனுப்புகிறேன். அதற்குள் உங்கள் மனசு மாறினல் நீங்கள் இதை வாங்கிக்கொள்ள வேண்டாம்" என்று சிற்பி சொன்னபோது, இல்லை, இல்லை; இப்போதே எடுத்துக்கொண்டு போகிறேன். இந்த நண்பர் எனக்குப் பிணையாக இருப்பார். ஊர் போனவுடன் பணத்தை அனுப்பிவிடுகிறேன்” என்று பரபரப்பாகப் பேசினர் செல்வர்.

"இன்னும் சில சில்லறை வேலைகள் இருக்கின்றன; அவற்றையும் செய்து அனுப்புகிறேன். நீங்கள் கவலையில்லாமல் ஊருக்குப் போங்கள்" என்று சொல்லி அவரை அனுப்பினார் கலைஞர்.

அவருக்கு இந்த மூன்று காட்களில் அதேமாதிரி வேறு ஒன்றைச் செய்துவிடலாம் என்ற தைரியம். சாஸ்திரியார் நவராத்திரி ஆரம்ப நாள் காலையில்தான் வரப் போகிறார் என்று தெரிந்திருந்தமையால் அதற்குள் செய்து விடலாம் என்ற துணிவு ஏற்பட்டது. செய்யத் தொடங்கி

குமரி-6