பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125


யாகின்றன. குழந்தைக்கு ராமன், லக்ஷ்மணன், சீதை ஆகி யோரின் உதவி இருக்க வேண்டுமாம். மீனாட்சி அம்மனின் துணை வேண்டுமாம். அப்படித் தாய் ஆசைப்படுகிருள். அவள் தன் குழந்தையின் மேலுள்ள அன்பால் என்னவெல்லாமோ சொல்லுகிறாள். அவளுக்கு அந்தக் குழந்தைதான் எல்லோரையும் விடப் பெரிய தெய்வம். பாட்டைப் பார்க்கலாம்:

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ

ராமர் பசுவடைக்க-என் கண்ணே உனக்கு

லட்சுமணர் பால் கறக்க

சீதையம்மாள் எழுந்துவந்து-என் கண்ணே உனக்கு

சீக்கிரமாய்ப் பால்காய்ச்சி

பால்காய்ச்சிப் பால்வார்த்து-என் கண்ணே உனக்கு

பசுந்தொட்டில் வைத்தாட்ட

தொட்டிலுக்கும் கீழாக-என் கண்ணே உனக்கு

துணையிருப்பாள் மீனாட்சி

இப்படி வளர்க்கின்ற குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது. பையன் தாயின் மடியைவிட்டுத் தானகவே வீதியிலும் கழனிகளிலும் ஒடி யாடித் திரியும் பருவத்தை அடைந்துவிடுகிறான்.

அப்படி அவன் வளர்ச்சியுற்றதில் தாய்க்கு அளவில்லாத மகிழ்ச்சிதான். இருந்தாலும் ஒடியாடித் திரிகின்ற பருவத் திலே ஏதாவது தீங்கு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று தாயுள்ளம் கவலைப்படுகிறது. 'இளங்கன்று பயமறியாது’ என்பது போலப் பையன் துடுக்குத் தனமாக எங்கும் போக முயல்வான். சில சமயங்களிலே பாம்பிருக்கும்; அல்லது வேறு ஆபத்து இருக்கும். அப்படிப்பட்ட இடங்களுக்குப் போக வேண்டாமென்று தாய் அன்போடு எச்சரிக்கை செய்