பக்கம்:கீர்த்தனை அமுதம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கீத கலாநிதி, இசைப் பேரறிஞர் உயர்திரு. செம்மங்குடி சீனிவாசய்யர் அவர்கள் இந்நூலுக்கு வழங்கிய மு. க வு ைர இசை என்பது மிகவும் உயர்ந்த தெய்விகக் கலை. அதன் மூலமாக ஆண்டவனேப் பாடித் துதித்து அவன் அருளைப் பெற்ற பெரியோர்கள் பலபேர் நம் நாட்டில் தோன்றியிருக்கிரு.ர்கள். கருநாடக சங்கீதத்திற்கு என்றும் அழியாத சட்டதிட்டங்களே அமைத்துக் காப் பாற்றியவர்கள் அந்த மஹான்களே ஆவர். அவர்களில் முக்கியமாக பூரீ தியாகப்பிரம்மம், பூரீ முத்துஸ்வாமி தீட்சிதர், பூர் சியாமா சாஸ்திரிகள் என்ற சங்கீத மும்மூர்த்திகள் நமது இசைக்கலை என்றும் மாருமல் தூய்மையோடு நிலைபெற்று நிற்க வழிவகுத் தார்கள். அவர்கள் தம் இஷ்ட தெய்வங்களே சாகித்தியங் களின் மூலமாகப் பாடி நமது இசையை என்றும் அழியாத பெரிய செல்வமாக நமக்கு விட்டுச் சென்றுள் |ளார்கள். - அம் மஹான்களின் வழிவழியாக சாகித்ய கர்த் தாக்கள் பலர் தோன்றி இசைக் கலேயையும் கடவுள் பக்தியையும் எங்கும் பரப்பினர்கள். இம்முறையில் நமது திரு. ம. ப. பெரியசாமித்துாரன் அவர்கள் மேலே குறித்த மஹான்களின் வழியைப் பின் பற்றித் தமது இஷ்டதெய்வமான முருகப்பெருமானை யும், மற்றும் பல பெயர்களால் வணங்கப்படும் இறைவ னைப் பேதமில்லாமலும், இனிய தமிழில் நல்ல இசை வடிவத்தில் மனமுருகிப் பாடியுள்ளார்கள். கீர்த்தனை, விருத்தம், காவடிச்சிந்து, நவராகமாலிகை முதலிய பல வகைகளில் சாகித்யங்களை இயற்றியிருக்கிருர்கள். r