பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.3 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

போகிறான்." என்றார். கட்டை வண்டிதானே? மெதுவாகத்தான் போகும்?" என்றார் இவர்.

மேல் நாட்டார்

சத்தியாக்கிரகப் போர் நடந்து கொண்டிருந்த காலம். வெள்ளைக்காரர்களைத் தொண்டர்கள் மதிக்காமல் பேசினார்கள். ஒரு தொண்டர் இவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, "தம்மை அடிமைப்படுத்தி ஆளுகிறார்களே! போயும் போயும் நமக்குக் குமாஸ்தா வேலைதானே கொடுக்கிறார்கள் ? கலெக்டரா? வெள்ளைக்காரனுக்குத்தான் அந்த வேலை. இஞ்சினியரா? வெள்ளைக்காரன்தான். மேல் உத்தியோகத்துக்கு இந்தியர்களை நியமிக்கிறார்களா?" என்று காரசாரமாகச் சொன்னார். "ஆம் ஐயா! அவர்கள் மேல் நாட்டார். யாரையும் தமக்கு மேல் நாட்டார்" என்றார் இவர். - -

பால் காகிதம்

இவர் சொற்பொழிவில் சொன்னது:

சென்னையில் மாடுகள் நல்ல புல்லையே தின்கிறதில்லை. காகிதம் முதலியவற்றைத் தின்கின்றன. அதனால் பாலுக்கு நல்ல மணமும் சுவையும்

இருப்பதில்லை. ஒரு பையனை, "பால் ஏன் வெளுப்பாயிருக்கிறது?" என்று கேட்டேன். "மாடு காகிதத்தைதத் திண்கிறதனால்! " என்று பதில்

சொன்னானன் . "காகிதத்தைத் தின்றால் பால்'வருமா?" என்று கேட்டேன். "ஆமாம்,'அதனால் தானே நாம் எழுதும் காகிதத்துக்குப் பால் காகிதம் என்று பெயர்