பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

காற்றில் வந்த கவிதை

கேலிப் பாட்டு

சோம்பலை யாரும் பாராட்டமாட்டார்கள். சோம்பித் திரிகின்றவர் வாழ்க்கையிலே வெற்றி பெற முடியாது. அதனால்தான் பாரதியார் தமது பாப்பாப் பாட்டிலே, சோம்பல் மிகக் கெடுதி பாப்பா' என்று பாடி இருக்கிறார் .

நாட்டுப்புறத்தில் உள்ள மக்களில் பெரும்பாலோர் உடல் உழைப்பினலே வாழ்க்கை நடத்துகின்றவர்கள். அவர்கள் சோம்பேறிகளாக இருக்க முடியாது.

ஆளுல், அங்கேயும் சில சோம்பேறிகள் இருப்பார்கள். அவர்களே யாரும் மதிப்பதில்லை. அவர்கள் எல்லோருடைய இகழ்ச்சிக்கும் கேலிக்கும் ஆளாவார்கள். அப்படிப்பட்ட சோம்பேறி ஒருவனைக் கேலி செய்வதுபோல ஒரு பாட்டுண்டு. அந்தச் சோம்பேறி மண்வெட்டி வேலை செய்யாவிட்டாலும், ஆடுகளையாவது மேய்க்கக்கூடாதா? அதையும் செய்யமாட்டானாம். வெய்யிலே அவன் மேல் படக்கூடாது. அதே சமயத்தில் சோளச் சோறு அவன் தொண்டையில் இறங்காது. கேழ்வரகிலே களி செய்து ப்ோட்டால்