பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

காற்றில் வந்த கவிதை

சீதனம்

ரு வேடிக்கையான சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. உழவர்களான அண்ணனும் தம்பியும் அந்தச் சம்பவத்திற்குப் பாத்திரமாக இருந்தார்கள்.

தம்பி காலை நொண்டி நொண்டி ஒரு மாலை நேரத்திலே வீட்டுக்கு வந்தான். உண்மையில் அவன் காலில் ஒரு தொந்தரவும் இல்லை. வேண்டுமென்று அவன் அப்படிப் பாசாங்கு செய்து நடிக்கிறான். வீட்டிலே அவனை அவன் மனைவி எதிர் பார்த்திருந்தாள். திண்ணையிலே அண்ணன் அமர்ந்திருந் தான். அண்ணி பக்கத்திலே நின்றாள்.

அவர்களைப் பார்த்ததும் தம்பி மேலும் அதிகமாக நொண்ட ஆரம்பித்தான். "தம்பி, ஏன் இப்படி நொண்டுகிறாய்? காலிலே என்ன?" என்று அண்ணன் பரிவோடு கேட்டான்

"அண்ணா, எனக்கு என் மாமனர் வீட்டிலிருந்து வ்ந்ததே சீர்க்கடாரி, அது பால் கறக்கும்போது உதைத்துவிட்டது” என்று சொல்லிக்கொண்டு தம்பி உட்கார்ந்தான்.