பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

குமரியின் மூக்குத்தி

கத் தெரியும். காலையும் மாலையும் அவர்கள் காட்டினூடே சென்று மலரையும் காய்கனி களையும் தொகுத்து வருவார்கள். அருவி காலாக ஓடும் ஓரிடத்தில் மூங்கில் அடர்ந்து வளர்ந்திருந்தது. அப்புதரின் அருகில் அருவிநீர் தத்திக் குதித்து நுண்டுளியை வீசும் பாறை ஒன்று உண்டு. அங்கே அவ்விருவரும் அமர்ந்து மலையையும் வானையும் கண்ணால் அளந்து பார்த்து இன்புறுவார்கள்.அவர்களுக்கு அதிகமாகப் பேசத் தெரியாது.ஆனால் அவர் களுடைய கண்கள் தம்முள்ளே பேசிக் கொள்ளும்.அந்தப்பார்வைக்குப் பொருளுரைக்க இன்று வளம் பெற்று விளங்கும் எந்த மொழியிலும் சொல் இல்லை.

அவர்களுடன் வாழ்ந்தவர்களுக்கு அவ்விரு வருடைய காதலையும் கண்டு பொறாமை உண்டாகவில்லை;வியப்புத்தான் உண்டாகியது. அவர்கள் தங்களினும் உயர்ந்தவர்கள் என்ற உணர்ச்சி தோன்றியது. அவர்களை வணங்க வேண்டும் என்பது போன்ற ஆசை எழுந்தது. ஆனல் அவர்களுக்குக் காலில் விழுந்து வணங்கத் தெரியாது. அவர்களை நெருங்காமல் நின்று கையைத் தூக்கிக் குவித்தனர்.

காமனும் ரதியும்போல அவ்விருவரும் வாழ்ந்தார்கள். ஆனால் காதலின் தெய்வங்களாகிய அவர்களைப்பற்றிய கற்பனையை அவர்கள் அறியார்.

நாள் ஓடிக்கொண்டிருந்தது. அருவியும் ஒடிக்கொண் டிருந்தது. அவர்கள் காதல் பாறைபோல உறுதியாக இருந்தது.

என்றாவது காட்டுக்குள்ளே போகும்போது அவனும் அவளும் மரச்செறிவினுாடே பிரிந்து போய்விடுவார்கள். அவன் மெல்லி என்று கூவுவான். அந்தக் குரல் மலையிலே பட்டு எதிரொலிக்கும். மான்களே விழித்துப் பார்க்கச் செய்யும். அவள் காதில் அந்தக் குரல் விழுந்தால் அதற்கு எதிர்க் குரல் கொடுப்பாள். அதைச் சிள் வண்டின் ஒலியென்று சொல்லலாமா? சே! அதில் இனிமை இல்லையே! அவன்