பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வைகளில் பனி மலர்களைக் கண்ட அவன்-அவள் இமைகளுக்கு நடுவே முள் ஏன் வந்தது என்பதை அழகாய் ராம் தீட்டிக் காட்டுகிறார். இதில் உள்ள கட்டுரைகளில் இரண்டு, பிரெஞ்சுப் புதுக்கவிஞர் போதலேர் பற்றியும் அமெரிக்கப் புரட்சிக் கவிஞர் லாங்ஸ்டன் ஹியூஸ் பற்றியும் அறிமுகம் செய்வன. 'சிலநேரங்களில் சில கவிஞர்கள் என்ற தொடருக்காக கவிஞர் முருகுசுந்தரம் எழுதியது போதலேர் பற்றிய கட்டுரை. போதலேர் பரமனைப் பாடவில்லை; பாமரனைப் பாடியிருக்கிறார் ஏழை, குடிகாரன், பிச்சைக்காரன், விபச்சாரி, அபலை போன்றோர்.அவரைக் கவர்ந்த பாத்திரங்கள். சர்ரியலிசம், சிம்பலிசம் போன்ற இலங்களுக்கு போதலேரே ஊற்றுக்கண் என்கிறார் முருகுசுந்தரம். போதலேரின் சில கவிதைகளையும் இடையிடையே தமிழாக்கித் தந்திருக்கிறார். வெளிநாட்டு இலக்கிய மேதைகளை இப்படி எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்தினால் தமிழ்ப் படைப்புலகில் பல மாறுதல்கள் நிகழக்கூடும். அமெரிக்க நீக்ரோக் கவிஞர் லாங்ஸ்டன் ஹியூவின் அறிமுகக் கட்டுரை உயிர்த்துடிப்புடன் எழுதப்பட்டுள்ளது. பேராசிரியர் கலைதாசன் ஈடுபாட்டோடும் உணர்ச்சிப் பரவசத்தோடும் ஹியூஸ் கவிதைகளையும் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். கட்டபொம்மன் கதை, கான்சாகிபு சண்டை முதலிய நாட்டார் கதைப்பாடல்களில் உள்ளதுன்பியல் ஆய்வு செய்கிறார் அ.மார்க்ஸ், 'கதைப்பாடல்களும் துன்பியலும் என்னுங்கட்டுரையில். நிலவுடை மைக்கும் மேலாதிக்கத்துக்கும் எதிராக ஆங்காங்கே கிளர்ந்தெழுந்த வர்கள் வலிமை குறைந்தவராயினும் வரலாற்றுக் கடமையைச் செய்தவர்கள் என்று மதிக்கப்பெறுகிறார்கள்; அவர்கள் மரணங்களும் வீழ்ச்சிகளும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுத் துன்பியல் நிகழ்ச்சிகளாக அமைந்தன என்னும் மார்க்ஸின் முடிவு இப்புக் கொள்ளக்கூடியது. இதனைக் கதைப்பாடல்களில் மட்டுமல்ல. வட்டார வரலாற்றிலும் காண முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது மீ. மனோகரனின் புதுக்கோட்டைப் புரட்சியாளன் வீர வெங்கண்ணன் கட்டுரை. 'கிழவன் சேதுபதி, 'தென் அமெரிக்காவின் சோழர்கள் என்னும் வரலாற்று நூல்களை எழுதிய பெருமைக்குரியவர் இக்கட்டுரையாசிரியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/8&oldid=463912" இலிருந்து மீள்விக்கப்பட்டது