பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியிலே போயிட்டாருன்னு தானே சொன்னேன். ஒலகத்தை வுட்டே போயிட்டாருன்னா சொன்னேன்! ஏன்யா, ஒன் வாயிலே நல்ல வார்த்தையே வராதா? - வியாபாரி:- அது தானே பாத்தேன். அவரு எப்பிடிப் போவாரு ? நான் இருக்கறப்போ! என் வயித்துவலி இருக்க, நீ இருக்க, நம்ப நர்சம்மா இருக்க அவருமட்டும் எப்பிடிப் போவாருன்னு எனக்கு அப்பவே சந்தேகம்! . நர்ஸ்:- காலங்காத்தால இது வந்திடிச்சா செட்டியாரே! வயிறு இருக்கற வரைக்கும் வலின்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யும் இப்ப இது என்ன புதுசா? இந்த ஆஸ்பத்திரி ஆரம்பிச்ச நாள்ளேருந்து இருக்கு! - வார்டுபாய்:- டாக்டர் ஏதாவது சொன்னா அதைக் கேக்கனும் வயிறு தான் பெரிசா இருக்குன்னு, நெனச்ச நேரத்துல கெடச்சதை வளைச்சு மாட்டினா, வலிவராம என்ன பண்ணும்? (டாக்டர் வருகிறார்) டாக்டர்:- நர்ஸ் இங்கே என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க? மெட்டர்னிடி வார்டுல ஒரு அர்ஜண்ட் சிசேரியன் கேஸ். அங்க ஆளு இல்லாம திண்டாடிக்கிட்டு இருக்காங்க! இங்கே கதை அடிச்சுக்கிட்டு இருக்கீங்க? ஒ ச்ெட்டியாரா? வாங்க... வாங்க...! என்ன இவ்வளவு தூரம்? வியாபாரி. நீங்க எங்கியோ வெளியில போயிட்டிங்கன் னாங்க? - டாக்டர்:- என்னங்க செய்யறது? இருக்கறது நான் ஒருத்தன் தான் மத்த எல்லா டாக்டருங்களும் ஸ்டிரைக்! நானும் சேந்து இருப்பேன். ஏதோ ஒரு சின்ன புரொமோஷன் வர்ர மாதிரி இருக்கு. எதுக்கு இந்த நேரத்துல ஸ்டிரைக், அது இதுன்னு கெடுத்துப் பானேன்னு: ஆமா அது கெடக்கட்டும் ஒங்க விசயம் என்ன? வியாபாரி:- அதாங்க! வயித்துவலி போகவே மாட்டேங்கு துங்க! - டாக்டர்:- அது என்ன பண்ணுது? அது பாட்டுக்கு இருந்திட்டுப் போகட்டும். ஆமா? எங்க தான் வலிக்குது? வியாபாரி: வயித்துல தாங்க! 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/45&oldid=463951" இலிருந்து மீள்விக்கப்பட்டது