பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியாபாரி:- காலையிலேருந்து இங்கதான் இருக்கேன். இதா வரேன்னு டாக்டர் வெளியிலே போனாரு இன்னும் வரல்லே! எனக்கு வயித்துவலி போவேனாங்குது அரசு:- ஏன்சாயந்தரம் டாக்டரோட கிளினிக்குல போயிப் பாக்குறது? நல்லா கவனிப்பாரே? வியாபாரி:- போகலாம்! அங்க போனா பணம் குடுக்கணுமே? தர்ம ஆசுப்பத்திரி நமக்கு இல்லாம வேறே எதுக்கு இருக்கு? ஏன் நீ போறது? அரசு:- என்ன வியாபாரி நீ செட்டியாரே! இங்க டாக்டருக்கு நூறு ரூபாய் தள்ளினா இரண்டாயிரம் ரூபாய் இலவச மாப் பாத்துக்கலாம். மருந்து வாங்காமயே நீ இம்பர்ஸ்மெண்ட் வாங்கலாம்! இந்த சவுகரியம் எங்கே வரும் (அரசியல்வாதி நுழைகிறார்) வியாபாரி:- அது சரி! இதுக்குத்தான் ஒரு கவர்மெண்ட் உத்தியோகம் வேணுங்கறது!.... இதோ காலங்காத்தால பரிவட்டம் சூழ வந்துட்டானுங்க! தொறந்த ஆட்டுல நாய் நொழையற மாதிரி! (பலமாக) அய்யா... வாங்க... வாங்க! ஏது இவ்வளவு தூரம் வணக்கமுங்க (எழுந்து கும்பிடுகிறார்கள்) அரசியல்: என்ன செட்டியாரே! எப்பிடி இருக்கீங்க? நலந்தானே? வியாபாரி:- என்னமோ இருக்கேங்க இந்த வயித்துவலி போவேனாங்குது. டாக்டரைப் பாக்கலாமின்னு வந்தேன். அரசு:- அவருக்கே எங்க வலிக்குதுன்னு தெரியாது! ஒடம்பு பூறாவயிறு வயிறு வலிக்குதுன்னுமொத்தமாகச்சொன்னாப் போதுமா? வியாபாரி:- பின்னே எதுக்கு டாக்டர் இருக்காரு? ஒடம்புக்கு என்னன்னு நாம சொல்லி அவரு என்ன வைத்தியம் பாக்கறது? என்னங்க நான் சொல்றது? மாடு, ஆடு, கோழி இதெல்லாம் ஒடம்புக்கு என்னன்னு சொல்லியா வைத்தியம் பாக்கறாங்க! நாம வாயினால சொல்லியே வைத்தியம் பாக்றது இல்லே! என்ன படிப்பு படிச்சிட்டு வராங்கன்னு தெரியல்ல! 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/52&oldid=463958" இலிருந்து மீள்விக்கப்பட்டது