பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

துதிக்கையிலே

விநாயகர் அகவலைப் பற்றிச்

சொற்பொழிவு ஆற்றினார் இவர். அப்போது சொன்னது:

விநாயகர் அகவல் ւմուգமுடித்தவுடன் விநாயகப் பெருமான் ஒளவைப் பாட்டியைத் தம் துதிக்கையால் தாங்கிக் கைலாசத்தில் சேர்த்து விட்டார். அங்கே திருவாயிலில் ஒளவை உட்கார்ந் திருந்தாள். சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனைகக் காணும் வேகத்தில், போகிறவர் பாட்டியைக் கவனிக்கவில்லை. பின் வந்த சேரமான் பெருமாள் , நாயனார் கண்டார். "எப்படி நீங்கள் இங்கே வந்து சேர்ந்தீர்கள்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார். "விநாயகப் பெருமானைப் பூசை பண்ணினேன். அவரைத் துதிக்கையிலே, அவர் துதிக்கையிலே வந்து சேர்ந்தேன்" என்றார்.

கொப்பரை

குன்றக்குடியில் திருமுறை விழா நடந்தது. இவர் போயிருந்தார். நண்பகல் உணவு முடிந்தது. எல்லாரும் கையலம்பப் போனார்கள். இவருடன் சென்னியப்ப முதலியார் என்ற அன்பரும் போனார். கை கழுவ ஒரு கொப்பரையில் தண்ணிiர் வைத்திருந்தார்கள். முன்னே போனவர்கள் கையலம்பியதனால் கொப்பரையில் தண்ணிர் ஆகிவிட்டது. சென்னியப்ப, முதலியார் கை கழுவப் போனவர், "கொப்பரையில் தண்ணிர் இல்லையே!" என்ற்ார், உடனே இவர், "ஆம், அது தன் பெயரைக் காப்பாற்றிக் கொண்டது. தண்ணிர்