பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 - சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

தான், ரசம்

இவர் சொற்பொழிவில் சொன்னது:

அகந்தை இருக்கும் வரையில் ஞானம் உண்டா காது. இரவில் எங்கேயோ போய்விட்டு வந்து கதவை இடிக்கிறோம். நேரமாகி விட்ட படியால், உள்ளே உள்ளவர்கள, "யார்?" என்று கேட்கிறார்கள். "நான்" என்கிறோம். தூக்க மயக்கத் தில் இருந்தவர்கள் மறுபடியும், "யாரு?" என்று '.. இழுத்தபடி கேட்கிறார்கள். நாம், "நான்தான்" என்று அழுத்தமாகச் சொல்கிறோம். அந்த நானும் தானும் அகந்தையைக் காட்டுகின்றன. -

நாம் சாப்பாட்டில் உண்ணுகிற குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வேறுபாடு? குழம்பு குழம்பியிருக்கும்; தான் இருக்கும். ரசம் தெளிவாக இருக்கும். வாழ்க்கையிலும் தான் என்ற அகந்தையிருந்தால் குழம்பியிருக்கும். அது இல்லாமல் இருந்தால் ரசமாக இருக்கும்; தெளிவு ஏற்படும்.

தையல் பிரிந்தால்

ஒருவருடைய மனைவி இறந்து போனாள். அவளிடம் மிகவும் அன்புடன் இருந்த அவள் கணவர் அடிக்கடி மாமனார். வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். மனைவி இறந்த பிறகு அந்தப்