பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 43

என்று கேட்டார் நண்பர். அவன், "ஐந்து ரூபாய் பெரிசா?" என்றான். "இந்தா, உன்னை எனக்குப் பலகாலமாகத் தெரியும். உனக்கு அடிக்கடி வேலை கொடுத்து வருகிறேன். : இனியும் கொடுப்பேன். இப்போது மூன்று ரூபாய் கொடுக்கிறேன். இதை முடி. சொன்னத்தைக் கேள்" என்றார் அவர்.

அருகில் இருந்த இவர் சிரித்தார். "என்ன சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார் நண்பர். "அவன் வெள்ளி, ரூபாய் வேண்டுமென்று கேட்கிறான். நீங்கள் சொன்னத்தையே கேட்கச் சொல்கிறீர்களே! என்றார் இவர். (சொன்னத்தை சொன்ன் காரியத்தை, சொர்ணத்தை.) .

வேணுங்கிறவர்

வேணுகோபால் என்பவர் இவருடன் பயின்ற நண்பர். அவர் இவரைப் பார்க்க வந்தார். அவரை யாவரும் வேணு, வேணு என்று அழைப்பார்கள். தம் வீட்டுக்கு வந்த அவரை இவர் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். "இவர் எனக்கு இனிய நண்பர். எல்லாரும் வேணுங்கிறவர்" என்றார். (வேணுங்கிறவர் வேணு என்கிறவர், வேணும் என்கிறவர்.)