பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

இவர், "உன் பெயர் என்ன அம்மா?" என்று கேட்டார். அவள் தன் பெயரைச் சொல்லிவிட்டு, "ஏன் கேட்கிறீர்கள்?" என்றாள். "உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்று சொல்லியிருக்கிறது. உன்னை நினைக்க வேண்டுமே! அதற்காகக் கேட்டேன்" என்று சமாதானம் சொன்னார்.

ஒரு குறை

அன்பர் ஒருவர் வீட்டில் விருந்து நடந்தது. சிறப்பான முறையில் உணவுப் பண்டங்கள் இருந்தன. சாப்பிட்டு முடிந்தபிறகு வீட்டுக்காரர்,"எல்லாம் எப்படி இருந்தது? ஏதாவது குறை உண்டா?" என்றார். எல்லாரும், "பிரமாதமான விருந்து" என்றார்கள். இவர் "எல்லாம் பண்ணினர்கள்? இன்னும் ஒன்று பண்ணியிருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்" என்றார். வீட்டுக்காரர் சற்றே திகைப்புடன், "என்ன இல்லை? என்ன செய்திருக்க வேண்டும்?" என்று கேட்டார். "ஆளுக்கு இன்னும் ஒரு வயிறு பண்ணிக் கொடுத்திருந்தால் திருப்தியாகச் சாப்பிட்டிருப்போம்!" என்று இவர் சொன்னபோது வீட்டுக்காரர் முகம் வாட்டம் நீங்கிப் பிரகாசம் அடைந்தது.

இலையை

ஒரன்பர் விட்டில் இவர் சாப்பிட்டார். சாப்பிட்ட பிறகு இலையை எடுப்பவர்களுக்கு எளிதாக இருக்கட்டும் என்று, கீழே சிந்தியிருந்தவற்றை எடுத்து இலையில் போட்டார். வீட்டுக்காரர் இலையை இவர் எடுக்கப் போகிறாரோ என்று அஞ்சி,"இலையை வைத்து