பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

போட்டுத் தண்ணிர் இறைத்தோம். இப்போது பம்பு வைத்து விட்டோம்" என்றார்கள். உடனே இவர், "அப்படியானால் இனிமேல் தண்ணிருக்குக் கவ்லையே இல்லை" என்றார். (கவலை - கவலை ஏற்றம், மனக்கவலை.) -

எடுப்பது இலை

ஒரு வீட்டில் சாப்பிட்ட இவர் இலையை எடுக்கலாம் என்று எண்ணிச் சற்றே எடுத்தார். "அப்படியே வைத்து விடுங்கள். நீங்கள் எடுத்தால் சாப்பாடு போட்ட புண்ணியம் போய்விடும். சாப்பிட்டவர்கள் எடுப்பதில்லை" என்று வீட்டுக்காரர் சொன்னார். "நீங்கள், எடுப்பதிலை என்கிறீர்களா? நான் எடுப்பது இலைதானே?" என்று கேட்டுப் புன்னகை பூத்தார்

இவர்.

தள்ளாதவன்

இவரும் இவர் நண்பர்களும் ஒரு காரில் போய்க் கொண்டிருந்தார்கள், இடை வழியில் கார் நின்று விட்டது. டிரைவர் என்ன என்னவோ செய்தார்;

- வண்டி நகரவில்லை. "சரி, இறங்கி ஒரு கை தள்ளுங்கள்" என்றார். எல்லாரும் இறங்கித் தள்ளலானார்கள். இவரும் தள்ளப் போனபோது,"நீங்கள் சும்மா இருங்கள்" என்று காருக்கு