பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ - 114

அழகு பெறும் (கதிர்வேல் என்று கூறுவது காண்க). தைக்கும் - பகைவர் மார்பிலே தைக்கும். ஏர்மிகுந்த வெண்மை இயைந்திருக்கும் - அழகு மிக்க வெள்ளை நிறத்தைப் பொருந்தியிருக்கும். நேர் நிரை ஆம் பாவூடுநேர் நிரை என்னும் அசைகளாலாகிய கவிதையினுாடு. சேர்த்து - இணைத்து. கலைத் தொழிலார் - கவிதையாகிய கலையை இயற்றும் கவிஞர். பாங்கு இசைப்பார் - அதன் பெருமையைச் சொல்வர்.

நூலுக்கு : கூர்மை உறும் கதிரால் கோலம் உறும் - கூர்மை பெற்ற கதிரென்னும் கருவியினால் உருவத்தை அடையும் (பருத்தியை நூலாக்கும்போது கதிர் என்னும் கருவி பயன்படும்). தைக்கும் - துணியைத் தைக்கும். ஏர் இயைந்திருக்கும் நேர் நிரை ஆம் பா ஊடு சேர்த்து -நேராகக் கட்டியுள்ள பா, குறுக்கே வரிசையாக அமையும் ஊடு ஆகிய இரண்டிலும் சேர்த்து. கலைத் தொழிலார் - ஆடையை நெய்யும் தொழிலாளர்கள். பாங்கு இசைப்பார் - பக்கத்தில் இணைப்பார்கள்.

சிவபெருமானுக்கும் இட்டிலிக்கும்

ஆட்டியபின் ஆவியிலே

பக்குவங்கண் டங்கெடுக்கும் ஈட்டால் பொடிவெண்மை

ஏய்வு றலால் - போட்டஇலை மேலுறலால் சாம்பாரில்

மேவியின்பம் தந்திடலால் - கோலுமரன் இட்டிலியாக் கொள்.

சிவபெருமானுக்கு ஆட்டியபின் - உயிர்களைப் பிறக்கச் செய்து அலைத்த பிறகு, ஆவியிலே பக்குவம் கண்டு - அவ்வுயிர்களின் பக்குவத்தை அறிந்து. அங்கு எடுக்கும் ஈட்டால் - அப்போது மேற்கதிக்கு எடுத்துச்