பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

செம்மொழிப் புதையல்


மிகைபட வுணர்வேமாயின், ஈண்டை நலத்தான் நமக்கு மனவமைதி யுண்டாகா தன்றோ!" என்றது. இவற்றைக் கேட்ட மற்றொன்று, “ஆம், நாம் அவ்வுலகுசார்பாக ஒன்றும் அறிந்திலே மன்றோ உண்மையில், அங்ஙனமோர் உலகு உண்டென்பதை யேனும் எங்ஙனம் அறிதலாம்?" என்றலும், மற்றொரு பெடைப்புள், "அன்று, அங்ஙன மொன்று உண்டென்பதை நாம் நன்கு உணர்கின்றோம். யாதோ? நம் அன்னை கூறிய உள்ளொலி என்னுள் எழுந்திசைத்தது! யான் உணர்ந்தேன்" என்று கூறிற்று.

இக் கூற்றினைக் கேட்ட தலைக்குஞ்சு, "உன்னுள் எழுந்திசைத்ததாக நீ நினைத்தனைகொல்லோ அது தானே ஆ இவையாவும் வெற்றுரைகளே. இங்ஙனம் நின்னைக் கூறுமாறு நம் அன்னை கூறினாள்போலும் அம்மம்ம! நீ கூறுவனவும், அன்னை கூறுவனவும் பிறவும் வீண் பொருளில் யாப்புக்களேயன்றிப் பிறிதில்லை. நுண்ணிய கேள்வியறிவு மிகினும் இயற்கையறிவு கூடினன்றோ அது மாட்சி பெறும் யானும் அப்புல்லறிவே மேற்கொண் டிருப்பின், அவ் வுள்ளொலி என்னுள்ளு மெழுந்திசைத்த தென்பேன். இனி யான் அவ் வுலகு சேறும் செலவையும் நினையேன். சேறற்கு உடன்படலும் படேன். செல்க" எனச் சிறிது வெகுண்டுரைத்தது.

“இஃதன்று நீ நிற்குமிடம்’ என்பது பொருளாக வமைந்த நல்லிசை யொன்றை எடுத்திசைத்தவண்ணம், குடம்பையின் புறத்தே தாய் வர, அகத்திருந்த பார்ப்புக்களுட் சில, தாய் பாடி யதையே தாமும் பாடத் தொடங்கின. அந்நிலையில், அத் தாய்ப் புள்ளின் உள்ளும் அவ் வொலி யெழுந்தது. எழவே, மறுமுறையும், அது அந் நல்லிசையையே தொடங்கி, “இழுமெனோதையின் அருவி யிரங்கலும், மருங்கு கரை கொன்று கான்யாறு சேறலும், விண்ணகங் கடந்து கொண்மூ வேகலும், மால்வரை துளங்கக் கால்பொரு தோடலும், விரிகதிர்ப்பருதி பரவையின் மறைதலும் எப்பொருள் நாடிச் செய்கின்றன. இதற்குக் காரணமாவது, அவற்றி னகத்தெழுந்து, “இஃது அன்று நீ நிற்குமிடம்” என் றொலிக்கும் அருளொலி யன்றோ யாற்றொடு கூடுக முகிலொடு மொழிக காலினை வினவுக! நீவிர் செல்லிடம் யாதென்று அறியாவுலகமே! வரனெனும் வைப்பேயன்றோ! 'நீ செல்லிடம் யா தென