பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

செம்மொழிப் புதையல்


"அம்ம வாழி தோழி நம்மலை
அமையறுத் தியற்றிய வெவ்வாய்த்தட்டையின்
நறுவிரை யார மறவெறிந் துழுத
உளைக்குரற் சிறுதினை கவர்தலிற் கிளையமல்
பெருவரை யடுக்கத்துக் குரீஇ யோப்பி
ஓங்கிருஞ் சிலம்பின் ஒள்ளினர் நறுவீ
வேங்கையங் கவட்டிடை நிவந்த விதணத்துப்
பொன்மரு ணறுந்தா தூதுந் தும்பி
இன்னிசை யோரா விருந்தன மாக;
மையீ ரோதி மடநல் லிரே
நொவ்வியற் பகழி பாய்ந்தெனப் புண்கூர்ந்து
எவ்வமொடு வந்த வுயர்மருப் பொருத்தல்நும்
புனத்துழிப் போக லுறுமோ மற்றெனச்
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப்புடை யாடச்
சொல்லிக் கழிந்த வல்விற் காளை
சாந்தா ரகலமுந் தகையும் மிகநயந்
தீங்குநாம் உழக்கும் எவ்வ முனராள்,
நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறியென
அன்னை தந்த முதுவாய் வேலன்
எம்மிறை யணங்கலின் வந்தன் றிந்நோய்
தணிமருந் தறிவல் என்னு மாயின்,
வினவி னெவனோ மற்றே, கனல்சின
மையல் வேழ மெய்யுளம் போக
ஊட்டி யன்ன வூன்புர ளம்பொடு
காட்டுமான் அடிவழி யொற்றி
வேட்டஞ் செல்லுமோ நும்மிறை யெனவே.”

- (அகம், 388)


பாட்டின் நலம் காண்டல்

இதன்கண் "அம்மவாழி" யென்பது தொடங்கி, "இருந்தனமாக" (9) என்பது வரை, மெல்லியல் நல்லாள் வல்விற்காளையாகிய தலைமகன் கெடுதிவினவி வருங்கால் இருந்தநிலை விளக்கப்படுகின்றது. இங்கே அவர்கள் மூங்கில்