பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

செம்மொழிப் புதையல்


உயிர்வாகக் கருதுகின்றார்கள். எட்மாண்டு பர்க் (Edmund Burke) என்பவர், மக்கட்குத் தம் பெற்றோர்பால் உண்டாகும் அன்புக்கடுத்த நிலையில் உள்ளது அவரது தாய் நாட்டின்பால் உண்டாகும் அன்பே யாகும் என்றார். மாதா பிதா குரு தெய்வம் என்பது திருந்தி, மாதா பிதா நாடு குரு தெய்வம் என விளங்குதல் வேண்டும். இந்த அன்பு நம்மவரிடத்தே நன்கு வேரூன்றும் பொருட்டு இலக்கியம் செய்யக் கூடிய பணி இது வென்பாராய், நம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தரவர்கள் தாம் எழுதிய Essays in Constitution Making என்ற நூலில் கூறியதனை உங்கட்குக் கூறி இக்கட்டுரையை முடிக்கின்றேன்.

Our literature and art must take up the land for the subject of their treatment. Not the laudation of this or that figure or incident of history or mythology - for history or mythology may divide and antogonize - but the praise of the land of India must fire the artistic ambition of the poets and Painters of modern India. When we remember what poets like Gray and Thomson and Wordsworth and Burns have done to make their Countries dear to their people, we have a right to look to our poets to do smilar work for our Country. Landscape painting did much to spread the love of the land among the peoples of Europe. What Corot did in France and Gainsborough in England to make the scenery of their Country a delightful memory, Indian painters are now expected to do for the Indian scene.