பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

55



புழு :- அந்தோ ஆய்ந்திடு முணர்வுதன்னை நினக்கு அவ்வயன் படைத்திலன்கொல் அவனைக் காண்பனேல், அற்றதலை போக, அறாததலை நான்கினையும் பற்றித்திருகிப் பறிப்பேன்! அறிதியோ!! இக்கூற்று இத்துணையுறுதியுடைத்து; உண்மை யுடைத்து என்பனவற்றையுமோ யான் அறியேன் ஆ!! இத்துணைக்காலம் இவ்வுலகிடைப்பிறந்துழன்ற யான் ஈதறியாது ஒழிவலோ என்னே நின்மடமை என் பசிய நெடிய வுடலையும், எண்ணிறந்த கால்களையும் நோக்கும் இவற்றை நேரிற் கண்டும், எனக்கு இவ்வுடனிங்குமென்பதும், பல்வகை வண்ணமமைந்த புத்துடலொன்று எய்து மென்பதும் எத்துணை இழித்தக்க மொழிகளாகின்றன. இஃதறியாமையே பேதமை யென்பது. கூறுவோர்க்கு உணர்வு குன்றினும், கேட்போர்க்கும் அது குன்றுங் கொலோ?

பருந்து:- (சினந்து) என்னை கூறினை? “யாகாவா ராயினும் நாகாக்க, காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்னும் பொய்யில் மொழியினை மறத்தியோ? என்னை நீ மதியிலி யென்பது உண்மையே. கல்லா அறிவில் கயவர்பாற் கற்றுணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணுதலுண்டுகொல்! இதனைச் சிறிதேயு மறிந்திருந்தும், யான் இவ்வுண்மையைக் கூறியவந்தனனன்றே! நின் அறிவுக்கெட்டாதவற்றை வற்புறுத்திக் கூறநினைத்தலும், அது பற்றி நின்னுழை யெய்தலும் என்னிலைக்கு ஏற்பனவல்லவன்றோ! வானோக்கி யெழுங்கால் என்வாய்வழி வரும் இன்னொலி கேட்டோர்க்கு இன்பம் பயந்து, எனக்கு மதுவழியேயோர் சிறப்பினையும் நல்குதல் ஒருதலை. இது கிடக்க, நீ இனியேனும் வருவனவற்றையும், பிறர் கூறுவனவற்றையும் ஒன்றிய வுள்ளமொடு ஏற்றுக்கொள்க.

இவ்வாறு, புழுவின் புன்மொழிகள் பலவும் பருந்தின் செவியிற் புக்கும் அது வெகுளாது, நானாது, அன்புடை நன்மொழி கூறலும், புழு தன் அறியாமைக்கும், அதனாற் சினந்து