பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

செம்மொழிப் புதையல்


வுடைத்து என்பவனவற்றை யறியேனாகலின், மாற்றுக்கூறல் யாங்கனம் இயலும்?

புழு :- நன்று. கேட்டிசின். எனக்கு நின்னொப்ப உயிர்த் தோழமை பூண்ட சேடப்பூச்சி (வண்ணாத்திப்பூச்சி) யொன்று ஈண்டுச் சின்னாட்களுக்கு முன் வாழ்ந்து வந்தது. அதன் வழியெச்சமே ஈண்டு நீ காண்குறும் பச்சிளஞ் சினைகள். இவற்றை அதுதான் இறக்குங் காலத்து ஈன்று, என்னையும் புறந்தருமாறு பணித்தது மன்றி, இவை குடம்பை தனித்தொழியப் பறந்தேகு நாள்காறும் தற்குணவளித் தோம்புதல் செய்யுமாறும் கூறியகன்றது. அவ்வோம்படையேற்ற யான் அங்ஙனம் செய்யுமா றறியாது அலமருகின்றேன்.

பருந்து:- என்னை?

புழு :- அவ் வாற்றினை யான் அறியேனாகலின்.

பருந்து:- என் அறியாய்?

புழு :-அப்பூச்சியோ பறக்குமியல்பிற்று; மற்று, யானோ . ஊர்வனவற்றைச் சார்ந்த புல்லிய புழுவானேன். பறப்பனவற்றை ஊர்வன புரத்தல்,

   “பாய்திரைப் புணரி பாடவிந் தொழியினும்,
   காய்கதி ரிரண்டுங் கதிதிரி யோடினும்,"

கூடாது என்பது உண்மையன்றோ. அது பற்றியே இம்மயக்கம் எய்தியது.

பருந்து:- மயங்கல் வேண்டா. நுனித்து நோக்கின், இவற்றைப் புரத்தலும், ஏற்ற வுணவு கொடுத்தலும் நின்னா லெளிதிற் செயற்பாலன வென்பதே தோன்றுகின்றது. அன்றியும், செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, நினைத்தொறும் நினைத்தொறும் இம்முடிபே எய்துகின்றது.

புழு :- உய்ந்தேன் உய்ந்தேன்!! கூறுக.

பருந்து:-கூறுவல். தடையுமின்று. மற்று, யான் கூறுவனவற்றை நீ உள்ளவாறே யுட்கொள்ளுவாயோ வென்றையுறு