பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

செம்மொழிப் புதையல்


நடைபெற்று இயலுதற்கு இடம் வகுத்து அமைப்பவாயின. “வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்று தொல்காப்பியம் கூறுவதாயிற்று.

இவ்வறு வடவர் கூட்டுறவால், தமிழர் தம் தாய்மொழி வளர்ச்சிக்கண் ஊக்கம் குறைந்திருப்பதையும், வடமொழிக்கண் விருப்பும், வைதிக சமயக் கதைகளில் வேட்கையும் மிக்குற்றிருப்பதையும், சமண முனிவர் தெளிய வுணர்ந்தனர். தமிழர், வைதிக சமயப்பற்று மிகுந்து அதுபற்றிய கதைகளைக் கேட்டு, அவற்றிற்கு வேறாக வரும் சமண சமயக் கருத்துக்களையும் கதைகளையும் மேற்கொள்ளுதற்குத் தாழ்த்தனர். இவ்வாறு தம்பால் வேறுபட்டு நிற்கும் தமிழர் கூட்டுறவைப் பெறுதற்குரிய நெறியில் சமண முனிவர் முயல்வாராயினர். தமிழர்க்கு வடநூற் கதைகளில் விருப்பு மிக்கிருந்தமையின், தாமும் வடநூற்களையும், வடநூல் மரபுகளையும் தமிழின்கட் கொணருமுகத்தால் தமிழர் ஆதரவைப் பெறலாயினர். இந் நெறிக்குப் பெருங் கருவியாக விளங்குவது இளஞ் சிறார்க்குக் கல்வி பயிற்றுவிக்கும் பெருந் தொண்டேயாகும் என்று உணர்ந்தனர். அதனால் தாம் தங்கியிருந்த பள்ளிகளில் கூடங்கள் அமைத்து, அவற்றுள் இருந்து சிறுவர்க்குக் கல்விக் கொடை புரியலாயினர். அந்நாள் தொட்டே கல்வி பயிலும் இடங்கள் பள்ளிக்கூடங்கள் என வழங்கப்படுவவாயின.

ந. . தமிழ்த்தொண்டு

மண முனிவர்களின் தொண்டு தேவார காலத்துக்கு முன்னையதும், பின்னையதும் என இருவகைப்படும். தேவார காலத்தும், அதற்கு முன்னரும் இருந்த சமண முனிவர் பெருங் கல்வியும், அறம் உரைக்கும் அமைதியும் நிரம்பித் துறவறமே சீரிதாக மேற்கொண்டு இருந்தனர். இவர்கள் நெறியினைத் கடிந்து வாதுபுரிந்த சைவப் பெரியோர்களான ஞானசம்பந்தர் முதலியோர் இவர்களின் பெருங் கல்வியினையும், அறவுரை களையும் சுட்டி இருக்கின்றனர். "அமணரும் குண்டரும் சாக்கியரும் நயமுக உரையினர்", “ஒதியும் கேட்டும் உணர் வினையிலாதார் உள்கலாகாததோர் இயல்பினையுடையார்" என்றும், இவர்கள், அறம் உரைத்த பெருமையினை, “பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் அறவுரை",