பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

செம்மொழிப் புதையல்


முருகனையும் திருமாலையும் மக்கள் வழிபட்ட நலத்தை எடுத்தோதுகின்றது. பெயர் வகைகள் வேறுபட்டன வாயினும், கடவுட்டன்மை பொதுவாதலால், அவரவர் வழிபாடுகளும் இறைவனொருவனையே சுட்டும் என்பது பழந் தமிழர் கருத்து.

ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்
கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறுவேறு பெயரேரய்
எவ்வயி னோயும் நீயே நின் ஆர்வலர்
தொழுதகை யமைதியின் அமர்ந்தோயும் நீயே
அவரவர் ஏவ லாளனும் நீயே
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே.

என்றும்,

பகைவர் இவர்இவர் நட்டோ ரென்னும்
வகையுமுண் டோநின் மரபுஅறி வோர்க்கே.”

என்றும் வருவன காண்க. இவ்வாறே முருகனை வழிபடுவோர் ‘நீயே வரம்பிற்றிவ் வுலகம்’ என முருகனையும், கொற்றவையைப் பரவுவோர் கொற்றவையையும், முழுமுதற் கடவுளாக வழிபட்டமையின், வழிபாட்டு வகையில் வேறுபட்டுக் காய்தலும் பொருடற்றலும் செய்திலர்.

இந் நிலை இச் சங்க காலத்தை யடுத்து வந்த இளங்கோவடிகள் காலத்திலும் தன்மை திரியாதே இருந்தது. சிலப்பதிகாரத்தில் இந்திர வழிபாடும், திருமால் வழிபாடும், முருகவேள் வழிபாடும், கொற்றவை வழிபாடும் நிகழ்வது காண்கின்றோம். சைனத்துறவி.பால் அருகனை வழிபடுந் திறமும் நன்கு காணப்படுகிறது.

ஒருமூன் றவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதுஎன் செவியகம் திறவா;
காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு
நாமமல்லது நவிலாது என்நா;
ஐவரை வென்றோன் அடியிணை யல்லது
கைவரைக் காணினும் காணா என்கண்.

என்ற இளங்கோவடிகள், சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே, ‘திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே-