பக்கம்:சொன்னார்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14



என்னுடைய வாழ்நாளில் சுமார் இரண்டு வருட காலந்தான் நான் பள்ளியில் படித்திருப்பேன். அவ்விரண்டு வருடமாகிய எனது 8 வயதுக்கு மேற்பட்டு 11 வயதுக்குட்பட்ட காலத்தில் நான் பாடம் படித்த காலத்தைவிட உபாத்தியாயரிடம் அடிபட்ட காலந்தான் அதிகமா யிருக்கும். இதையறிந்த என் பெற்றோர்கள் இவன் படிப்புக்கு லாயக்கில்லை என்பதாகக் கருதி, தாங்கள் செய்துவந்த தொழிலாகிய வர்த்தகத்தில் என்னுடைய 11 வது வயதிலேயே ஈடுபடுத்திவிட்டார்கள். இந்த 2 வருடக் கெடுவிலேயும் என் கையெழுத்துப் போடத்தான் கற்றுக் கொண்டேன் என்று சொல்லலாம்.

—பெரியார் (24 - 4 - 1927)
(போளூரில் நடைபெற்ற ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில்.)

நான் ஆதியில் ஏழ்மையான குடியிற் பிறந்து, மிக்க கஷ்டப்பட்டுச் சொற்ப கல்விகற்றுக் கொண்டேன். பிறகு மிஷன் ஸ்கூல் உபாத்தியாராகவிருந்தேன். பின்னர் இரும்பு வியாபாரத்தில் பிரவேசித்தேன். இதில் பல கைத்தொழில்களையும் கற்றேன். எனது சொற்ப சுயார்ச்சிதத்தைக் கொண்டே ஒரு தண்டவாளப் பட்டரையை ஏற்படுத்தினேன். இதனால் நானும் எனது குடும்பமும் பந்து மித்திரர்கள் சுமார் 150 குடும்பங்களும் ஜீவிக்கவில்லையா? ஆகையால் நண்பர்களே! நமது மக்கள் முதலில் கல்வி கற்கவேண்டும். பிறகு வெவ்வேறு தொழில்களில் பிரவேசிக்க வேண்டு மென்பது எனது கருத்து,

தொழிலதிபர் கா. கோ பலபத்திர நாயகர்
(1895-ல் நடைபெற்ற எட்டியப்ப நாயகர் வன்னிய சங்கக் கல்விச்சாலை ஆண்டு விழாவில் பேசியது)

ஆறாண்டுகளுக்குப் பிறகு நான் என் தாய்நாட்டிற்கு வந்து வெளி உலகத்தில் அறிமுகம் கொள்ளலானேன். உலகத்தையே நான் மறந்துவிடவும், உலகமே என்ன மறந்து விடும்படியுமான எண்ணத்தைக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/16&oldid=1013130" இலிருந்து மீள்விக்கப்பட்டது