பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

பஞ்ச தந்திரக் கதைகள்

விராடன் மகளுக்குத் தோழியாய் இருக்கும்படி நேர்ந்ததில்லையா?

'பாண்டவர் குலத் தோன்றல்களைப் போல எடுத்த காரியம் முடிக்கும் வரை பொறுத்திருக்க வேண்டியது நம் கடமை யல்லவா?’ என்று சிரஞ்சீவி மேகவண்ணனுக்குப் பதிலளித்தது.

'கத்தி முனையிலிருந்து தவம் செய்பவர்களைப் போலவும், நெருப்பினிடையே புகுந்திருந்தவர்களைப் போலவும், பாம்புப் புற்றினுள் நுழைந்தவர்களைப் போலவும், பகைவர் கூட்டத்தினிடைப் புகுந்த நீ என்னென்ன துன்பம் அடைந்தாயோ?” என்று மேகவண்ணன் மேலும் அரற்றியது.

'அரசே, உன் அருளால் நான் எவ்விதமான தீமையும் அடையவில்லை. இருக்க வேண்டிய இடத்தில் இருக்காமல் இந்த மலைக்காட்டில் வந்து இருந்து, கவலையினால் நீ உடல் மெலிந்து போன தெல்லாம் நான் செய்த பாவமே!’ என்று சிரஞ்சீவிக் காகம் மேகவண்ணனிடம் அன்புடன் பரிந்து பேசியது.

‘இராமர் தான் இருந்த அயோத்தியை விட்டு வனவாசம் புகுந்ததும், அவருடைய தேவியான சீதை சிறைப்பட்டதும், இராவணனைக் கொன்று சீதையைச் சிறை மீட்டதும் எல்லாம் ராமருடைய தீவினையின் பயன் தானே!

'நளன் தன் அரசை இழந்ததும், தூயவளான தமயந்தியை, இரவில் சேலையை அரிந்து காட்டில்