பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



யானையை வென்ற வெள்ளை முயல்

135


‘இந்த யானைகளின் கையில் அகப்பட்டால், நம்மைப் பந்தடித்து விளையாடியே கொன்று விடும். ஒரத்தில் ஒதுங்கி நின்றால் கூட வந்து அடிக்கத் தொடங்கி விடும். இவற்றின் கண்ணில் படுவதே தவறு” என்று அந்த முயல் பயந்தது.

இவற்றின் கையில் அகப்பட்டுக் கொள்ளாமல் நாம் வேலையை முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, அது, பக்கத்திலிருந்த ஒரு மேட்டின் மேல் ஏறி நின்று கொண்டது.

மேட்டில் இருந்தபடியே, அந்த வெள்ளை முயல் யானை அரசனை நோக்கி,`ஏ, தும்பி! நலமாக இருக்கிறாயா?' என்று நலம் விசாரித்தது. வியப்புடன் திரும்பிப் பார்த்த அந்த யானை மேட்டின் உச்சியில் நின்ற முயலைப் பார்த்து, `நீ யார்?” என்று கேட்டது.