பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 273 தாயும் ஒள்ளிய தொடியும், மடப்பமு முடைய இவளினும் கடுமை புடையராவரோ, கூறுக எ. து. திண்பிணி பம்பி, அசைவின்றித் திண்ணிதாய்ப் பிணிக் கப்பட்ட அம்பி. ஆம்பி, தோணி, சேலையால் அசைதவின் நீக்குதற்குத் திண்ணிதாய்ப் பி னித் த ல் வேண்டுதலின், * திண்பிணி யம்பி ' என்ருர், எருமைக்கு அம்பி உவமை யாதல், மரையேற்றின் மேலிருந் தாடித் துறையம்பி, யூர் வான்போற் ருேன்று மவன் ' (கவி. 104) என்பதலுை மறியப்படும். இவளினும் என்புழி உறழ்ச்சி, தந்தைதாய ரினும் மிக்குற்ற சிறப்பினையுடையாள் என்பது தோன்ற கின்றது. அச் சிறப்பு, தந்தைதாய் என்ற இருவர் கடனும் தான் ஒருத்தியே ஆற்றுதல், குணகாடி மகிழ்தலினும் குற்ற நாடிக் கடிந்து தூய்மைசெய்தழில் சிறந்தமையின், தந்தை யை முற்கூறினர். " சான்ருே ைக்கு த ல் தந்தைக்குக் கடனே' (புறம், 812) என ஆசிரியர் பொன்முடியார் கூறுமாதுகாண்க. நின்னென்புழி இரண்டாவது தொக்கது; ஐயுங் கண்னு மல்லாப் பொருள்வயின், மெய்யுருபு தொகா விறுதி யான ". (சொல். 105) என ஆசிரியர் கூறிய வாறு அறிக. - வாயில்பெற வேண்டிப் பல்லாற்ருனும் இரந்து பின் னின்ற தலைமகற்குத் தலைவி அது ரோமையின், அவன் வருக்கி அவளது கொடுமைகூறக் கேட்ட தோழி, கின்பால் தவறுளதாயவழி, அதுபற்றி கின்னேக் கழறிக் கூறும் உரிமை யுடைய கின் பெற்ருேளினும், இவள் மிக்க உரிமையுடையள் என்பாள், இவளினும் நுந்தையும் யாயும் கடியரோ கின்னே என்ருள். 'தாய்போற் கழறித் தழிஇக் கோடல், ஆய் மனேக் கிழத்திக்கும்.” உரித்தென்றதல்ை, வாழ்க்கைத்துணே ய்ாம் நல்லியைபால், தான் இல்லிருந்து செய்யும் போறம் மாட்சியெய்துவது குறித்து, கடிவன கடிதலும் அவட்கு அறமென்றவாருயிற்று. பெற்ருேள், கின்பால் தமக்குள்ள மகன்மை யுரிமையால் தகுவன கூறிக் கழறுமிடத்து, கின்