பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 261 கருங்காலியும் ஆம்பலும் பொருந்தாவாயின ; அவை தேன் ஈட்டுவதாகிய வினைமுற்தின, அதனல், இவ்வாறு மொய்ப்ப வாயின, காண் எ. து. வெறுக்கையவாகி, முச்சி யூதம் வண்டு, ஏற்றினம் மேயல் அருந்தென, மோரோடமோடு ஆம்பல் ஒல்லா. அவை செய்த வினைய மன்ற என இயையும். போத்து முதலியன போல, ஏறு, ஏற்றை என்பனவும் யாத்த ஆண்பாற் பெய ரென மொழிப' (பொ. 521) வாகவின், எருமையின் ஆண் ன்றெனப்பட்டது. உழுதொழிற்கும், பண்டியிழுத்தற்கும் பயன்படும் சிறப்புடைமையின், 'நல்லேற் றினம்' என்ருர். ஆர்ந்தென என்பது அருந்தென என வந்தது. மேயல் ஆர்ங் தென்பது ஒரு சொல்லாய் மேய்க்தெனும் பொருளதா யிற்று. செய்தென வென்னும் வினையெச்சம் முடிக்குஞ் சொல்லா லுணர்த்தப்படும் தொழிற்குத் தன் முதனிலைத் தொழில் காரணம் என்பதுபட வரும் இயல்பிற்ருகலின், வண்டினம் ஒல்லாமைக்கு மேயலருக்தென வென்றது எது வாயிற்று. மோரோடம், செங்கருங்காலி. இதன்பூ மிக்க மனமுடையது ; இப்பூவை என மல்லிகை முதலிய நறிய பூக்களோடு வி ரவிச் செப்பினுள் அடைத்துவைத்தலும் பண்டையோர் மரபு : “ முதிராவேனில் எதிரிய அதிரல், பராசைப் பாதிரிக் குறுயிர் மாமலர், கறமோ ரோடமொ (டு) உடனெறிக் தடைச்சிய செப்பு ' (கற். 387) என ஆசிரியர் பாலை பாடிய பெருங்கடுங்கோ கூறியவாற்ருல் இஃதுணரப் படுகிறது. இம் மோரோடம் மாரோடமெனக் குறிஞ்சிப்பாட் டிற் காணப்படுகிறது; குல்லே பிடவம் சிறுமா ாேடம்" (78), என வருதல் காண்க, செய்த வினை, செய்து முடிக்கப்பெற்ற வினை ; எனவே, நிகழ்வில் அவ்வினையின்மை கூறியவாகுயிற்று. மன்ற, தெளிவுப் பொருட்டாய இடைச் சொல். பல்பொழில் என்பது வினைப்படு தொகுதி யன்மை யின், முற்.அம்மை வாராதாயிற்று. போதவிழ் முச்சி யூதும் என்றதனுல், அவிழ்ந்த போதிலுள்ள தேனையும் உண்ணுது வெறிதே மூசி மு.ான்றமை பெற்ரும்.