பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

செம்மொழிப் புதையல்


நெஞ்சிறுமாப்பும், பழியஞ்சி யீட்டும் பொருளின்ப முடைமையின், வழியெஞ்சா வான்பொருளும் உடையதாயிற்று. ஆகவே, அதற்கு இனி வேண்டற்பால தென்னாம்? ஒன்றுமில்லை யன்றோ!

நிற்க, ஒருநாள், இச் செம்புள்ளின் வாழ்க்கைத்துணையாய், ஒத்தவுணர்வும் பான்மையு முடையதாய், துணைச்சேவற்கு ஒருவாற்றானு முயர்வுதாழ்வில்லாக் கவினுங் காட்சியு முடையதாய் விளங்கிய பெடைப்புள், தன் கூட்டகத் தமர்ந்து, பார்ப்புக்கட்கு உணவாவனவற்றை யளித்து உவந்திருக்கையில், பகல்செய்யும் செஞ்ஞாயிறு பாவையிற் படிய, பைய இருள் வந்து பரவ, இன்பத்தெண்கால் இடைவந்துலவ, அருகோடிய அருவிக்க ணெழுந்த சிறுதிரை பொருதுவீழ்தலின் எழுந்த விழுமிய வோசையாங்கணும் பரவ, விரிகதிர்மதியம் விண்ணகத் தெழுந்து, மண்ணக மடந்தையின் மயக்கொழிப்பதுபோலத் தன் ஒண்கதிர் பரப்பிற்று. அது காலை, அப் பார்ப்புக்களு ளொன்று, தன் சிறுதலையை நீட்டி, அன்புகளிையும் ஆய்முக நோக்கி, "அன்னாய்! வாழி! நம் படப்பைத் தேன்மயங்கு பாலினும் இனிய இத் தெண்ணீர்யாறு செல்லிடம் யாதுகொல்” என வினவ, கேட்ட தாய்ப்புள், விடையறியாமையின், விளம்பல் கூடாது, குறுநகை காட்டி, “மக்காள்! யான் அறியேன். கலின் எனக் கலிக்கும் தூக்கணங்குருவியையாதல், கட்புலங்கதுவா விட்புலம் படரும் வானம்பாடியை யாதல் கேட்டல் வேண்டும். ஆண்டுத் தோன்றும் கோட்டெங்கின் குலைமீது அவை ஒருகால் வந்தமரினும் அமரும். அது போழ்து நீவிர் மறவற்க. நீவிர் கேட்டதும், அதனோரன்ன பிறவும் அறிதலாம் என்று கூறி, வானம்பாடியின் வள்ளிசையைத் தன் மென்குரலால், வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் இசைப்ப, குரீஇக்குஞ்சுகள் குளிர்ப்பெய்தி, “வானம்பாடிகொல் இக் கானம் பாடியது” என்றெண்ணலாயின.

மற்று, அவ் வானம்பாடும் வண்குருகு, தன் மெல்லிசை கொண்டு, காடும், காவும், கவின்பெறு துருத்தியும், யாறும் குளனும், வேறுபல் வைப்பும், ஊரும் நகரமும் உறைதரும் இல்லமும், ஊறுசெய் விலங்கும், ஊனுண் வேட்டுவர் விரிக்கும் கண்ணியும், பிறவும் மெய்பெற விசைத்தல் மரபு. அதனையொருகாலேனும் அருகமர்ந்து நன்கு கேட்டறியா இச் செம்புள்,