பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

பஞ்ச தந்திரக் கதைகள்

விட்டால், அதனால் பெருந் துன்பம் உண்டாகும்’ என்று பலவாறாக நரி எடுத்துக் கூறியது.

'அப்படி அந்த எருது எனக்கு என்ன தீமை செய்து விட்டது, சொல்!' என்று சிங்கம் கேட்டது.

‘அரசே, அது தங்களை இகழ்ந்து பேசுகிறதே அது ஒன்றே போதாதா?’ என்று நரி கேட்டது.

'இருக்காது. நாமே அதன் நட்பை விரும்பி ஏற்றுக் கொண்டோம். அப்படியிருக்க அது நமக்குத் தீமை செய்ய நினைக்கக் காரணமே யில்லை. அப்படியே அது தீமைசெய்ய முற்பட்டாலும், அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமேயல்லாமல் நாம் அதற்குத் தீமை செய்யக் கூடாது’ என்று சிங்கம் பெருந்தன்மையுடன் கூறியது.

அப்போது அந்த நரி இடை மறித்து, ‘அரசே, அரச பதவியிலும் செல்வத்திலும் ஆசையில்லாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அந்தக் காளை மாடு பொல்லாதது. அதை நீங்கள் நம்பிக் கொண்டிருப்பதே சரி இல்லை. எப்போது, எந்த வகையால் உங்களைக் கொல்லலாம் என்று அது சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறது. நல்ல அறிவுடைய அமைச்சர்கள் சொல்லும் புத்திமதி முதலில் நஞ்சைப் போல் தோன்றினாலும் பின்னால், அளவில்லாத செல்வத்தையும், வாழ்க்கையையும், இன்பத்தையும் உண்டாக்கும். தீயவர்களின் ஆலோசனை முதலில் அமுதம் போலத் தோன்றுமேனும், விரைவில் <span title="எல்லா


வற்றையும்">எல்லா