பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பஞ்ச தந்திரக் கதைகள்

'சரிதான், சரிதான்! இதைவிட வேறு என்ன ஆபத்து வேண்டும்? சூழ்ச்சிக்காரன் ஒருவனைப் பற்றிய யோசனைகளை மனத்தில் வைத்துக் கொள்ளாமல், அவனிடமே வாய்விட்டுச் சொன்னால் அதைவிட ஆபத்து வேறு என்ன வேண்டும்?

'தனக்கென்று சிறப்பாக ஆசிரியர் கூறிய உபதேச மொழிகளையும், தன் மனைவியிடம் கண்ட இன்பத்தையும், தன்னிடம் இருக்கும் செல்வத்தையும், தன் கல்வியையும், வயதையும், தான் செய்யும் தருமத்தையும், தன் ஆலோசனையையும் பிறர் அறியக் கூறக் கூடாது .கூறினால், அதனால் ஏற்படும் பயன் அழிந்து போகும்’ என்று உபதேசம் புரிந்தது நரி.

“என்னை அந்த மாடு என்ன செய்துவிட முடியும்?’ என்று சிங்கம் தன் வலிமையும் ஆங்காரமும் தோன்றக் கேட்டது.

அந்த மாட்டை நம்புவதே கூடாது. அதைப் பக்கத்தில் வைத்திருப்பதே சரியல்ல. அதை மேலும் கூட வைத்துக் கொண்டிருந்தீர்களானால் மூட்டைப் பூச்சியால் அழிந்த சீலைப் பேனைப் போல் அழிய நேரிடும்” என்று எச்சரித்தது நரி.

அந்த எருது என்னைக் கொல்ல நினைத்திருக்கிறது என்பதை நான் எப்படித் தெரிந்து கொள்வது?’ என்று சிங்கம் கேட்டது.